Video | கோவையில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை! தம்பியைக் கொலை செய்த அண்ணன்

போலீசார் கொலையாளி வினோத்தை கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் நீதிமன்ற உத்திரவின்படி வினோத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Video | கோவையில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை! தம்பியைக் கொலை செய்த அண்ணன்
ஆணவக்கொலை
  • News18
  • Last Updated: June 27, 2019, 5:33 PM IST
  • Share this:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிப்பாளையம் சிரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன்கள் வினோத் மற்றும் கனகராஜ். கூலித் தொழிலாளியான கனகராஜ் அதே பகுதியில் வசிக்கும் தர்ஷினி ப்ரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தம்பியின் காதலுக்கு அண்ணன் வினோத் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


சாதியை காரணம் காட்டி எழுந்த மோதலால் தம்பி கனகராஜ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த வினோத் தம்பியின் காதலை கைவிட வலியுறுத்தி மீண்டும் தகராறு செய்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது, கனகராஜை வினோத் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற அவரது காதலி தர்ஷினி ப்ரியாவும் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார்.

சாதி ரீதியாக நடைபெற்ற இக்கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய வினோத்தை தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இதன் பின்னர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலை சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அருகில் இருந்த வீடுகளுக்கு அங்கிருந்தவர்களிடம் விசாரித்து நடந்த சம்பவம் பற்றி ஆய்வு நடத்தினர். கொலை நடைபெற்ற போது வினோத்துடன் வேறு யாரேனும் இருந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பின்னர்,  வினோத் மீது கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. போலீசார் வினோத்தை கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் நீதிமன்ற உத்திரவின்படி வினோத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வெட்டி கொல்லப்பட்ட கனகராஜின் காதலி தர்ஷினி ப்ரியாவுக்கு கோவை அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also watch: தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை!

First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading