எடப்பாடி பழனிசாமி குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டதாக அரசியல் பிரமுகர் கைது!

யாரை திருப்திப்படுத்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார் என கருத்திட்டதாக அதிமுக ஐடி பிரிவு சதீஷ்குமார் புகார்.

எடப்பாடி பழனிசாமி குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டதாக அரசியல் பிரமுகர் கைது!
எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: January 4, 2020, 11:07 AM IST
  • Share this:
நெல்லை கண்ணன் கைது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் அண்மையில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சிராஜ்தீன். இவர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கோவை மத்திய மாவட்ட செயலாளராக உள்ளார்.


இந்நிலையில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும், யாரை திருப்திப்படுத்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார் என கருத்திட்டதாக அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் சிராஜ்தீன் மீது 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிராஜ்தீனை கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்