உங்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கனுமா? அசத்தல் ஐடியா கொடுத்த அமைச்சர்

கொரோனா பரவாமல் இருக்க மாஸ்க் போடாமல் யாராவது இருந்தால் அவர்களிடம் பேசாதீர்கள் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கனுமா? அசத்தல் ஐடியா கொடுத்த அமைச்சர்
எஸ்.பி வேலுமணி
  • Share this:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் ஏன் லாக்டவுண் செய்யவில்லை? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அந்தளவிற்கு கோவை மாவட்டததில் பரவல் இல்லை. ஆனால்  என் மகளுக்கு திருமணம் நடைபெறுவதால்  கோவையில் லாக்டவுண் போடவில்லை என்று  தவறான தகவல்களை பரப்புகின்றனர். தவறான தகவல்களை பரப்பி  அரசியல் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்.Also read... தமிழக பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு - நமிதா, கவுதமிக்கு முக்கிய பதவி

மக்களுக்கு கொரோனா மீதான பயம் குறைந்து போய் இருக்கின்றது எனவும், அனைவரும் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும், கொரோனா பரவாமல் தடுக்க மாஸ்க் போடாதவர்களிடம்  பேசாதீர்கள் எனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading