பொள்ளாச்சி அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 90 வயதான மூதாட்டி அருகில் உள்ள அவரது மகனின் வீட்டில் குமரன் நகர் பகுதியில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் என்ற வாலிபர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பொழுது மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மூதாட்டியின் இல்லத்தில் வந்து பார்த்தபோது மைதீன் வாலிபர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
பொதுமக்களை கண்டதும் மைதீன் என்ற வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியின் மகன் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் மைதீனை கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் அவர் மீது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் 90 வயது மூதாட்டிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.