முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவை, மதுரை மெட்ரோ ரயில் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் தகவல்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் தகவல்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

Madurai - Coimbatore Metro Projects: கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் - மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது, மே மாதத்திற்குள் தெரிவிக்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பதிலுரை அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் , 2022 -23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 3050 கோடி ரூபாய் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கேளம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. பன்னாட்டு உதவி நிறுவனங்களிடம் சமர்ப்பித்து அதற்கு அடுத்த நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

Also Read:  கடனுக்காக கடன்.. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி - முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்

கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது. பொது விவாதத்திற்கு எடுக்கப்படும். அதற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

First published:

Tags: Metro Rail, Metro Train, Minister Palanivel Thiagarajan, Tamilnadu, TN Assembly