நியூஸ் 18 செய்தியின் எதிரொலி: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்புக்கான செலவை ஏற்ற அறக்கட்டளை

நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியின் எதிரொலியாக துப்புரவு தொழிலாளி வெங்கடேஷ் என்பவரது மகனின் இந்த ஆண்டு மருத்துவபடிப்பிற்கான கட்டணத்தை கோவை நல்லறம் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

நியூஸ் 18 செய்தியின் எதிரொலி: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்புக்கான செலவை ஏற்ற அறக்கட்டளை
மாணவன் சுபாஷின் பெற்றோரிடம்  மருத்துவபடிப்பிற்காக  முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலகயை அன்பரசன் வழங்கினார்
  • News18
  • Last Updated: September 21, 2020, 5:28 PM IST
  • Share this:
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தஙர் கூலித் தொழிலாளி வெங்கடேஷ். இவரது மனைவி ஆதிலட்சுமி, வீட்டு வேலைகள் செய்து வருகிறார். கொரோனா காரணமாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், சமீபகாலமாக கழிவு நீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் துப்புரவு பணிகளில் வெங்கடேஷ் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மகன் சுபாஷ், ரஷ்யாவில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்திய நிலையில், மூன்றாவது ஆண்டு கட்டணத்தை கட்ட இயலவில்லை. இதனால் ரஷ்யாவில் 3 ம் ஆண்டு மருத்துவம் படிக்கும்  மாணவர் சுபாஷ்  படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டது.

துப்புரவு தொழிலாளி வெங்கடேஷ், தனது மகனின் மருத்துவபடிப்பிற்காக பட்டுவரும் கஷ்டத்தை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி பதிவு செய்து இருந்தது. இந்த செய்தியை பார்த்த கோவை  நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், மாணவரின் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து மாணவனின் பெற்றோரை கோவை வரவழைத்தார்.


Also read... கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்: தமிழக அரசுக்கு முன்னாள் ஆளுநர் குழு அளித்த பரிந்துரைகள் என்ன?

சென்னையிலிருந்து கோவை வந்த மாணவரின் பெற்றோர் , நல்லறம்  அறக்கட்டளை நடத்தும் அம்மா ஐ.ஏ.எஸ் அகடமியில், அறக்கட்டளை தலைவர் அன்பரசனை சந்தித்தனர். மாணவன் சுபாஷின் பெற்றோரிடம் மருத்துவபடிப்பிற்காக முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அன்பரசன் வழங்கினார்.

ஏழ்மையில் இருக்கும் மாணவர்களுக்கு நல்லறம் அறக்கட்டளை தொடர்ந்து உதவிகள  செய்து வருவதாகவும், ஐஏஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளித்து வருவதாகவும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் தெரிவித்தார்.நல்லறம் அறக்கட்டளையில் இருந்து உதவி செய்து இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கி இருப்பதாகவும், இந்த ஆண்டு கல்விகட்டணத்திற்கு  தேவைப்படும் மீதி தொகையும் அறக்கட்டளை சார்பில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருப்பதாகவும் நெருக்கடியில் இருந்த தங்களுக்கு உதவியதை வாழ்நாள் வரை மறக்க மாட்டோம் என மருத்துவ மாணவர் சுபாஷின் பெற்றோர் தெரிவித்தனர்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading