சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கணியூர் சுங்கச்சாவடியில், அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், கட்டணம் இன்றி சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டுமென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்து நேற்று மாலை சுங்கச்சாவடி முற்றுகையிடப்பட்டது. ஊழியர்கள் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், சாலையில் வந்த வாகனங்கள், சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்தனர்.
நள்ளிரவு 12.30 மணி வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், Fas tag பிரச்னை காரணமாக, அரை மணி நேரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அனைத்து வாகனங்களிலும் fastag முறைக்கு மாற ஜனவரி 1-ம் தேதி வரை அனுமதி தரப்பட்டிருக்கிறது.