கோவையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: காரணம் என்ன?

கோவை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 16 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தளர்வு அறிவிக்கப்பட்டபிறகு, கோவையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?

  • Share this:
கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 15,490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஊரடங்கு தளர்வில் போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 16,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,000-ஐ கடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் நாள்தோறும் சராசரியாக 550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வை மக்கள் தவறாக புரிந்துக்கொண்டு, பலர் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பதே தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையைப் பொறுத்தவரை, கொரோனாவால் இதுவரை 436 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 26,605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,027 பேருக்கு மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள பொதுமக்கள் தயங்குவதாக கூறப்படும் நிலையில், பல்வேறு இடங்களில் தவறான முடிவுகள் வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 11,662 காய்ச்சல் முகாம்கள் மூலம், 8,262 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க.. கொரோனாவிற்கும் டெங்குவிற்கும் தொடர்பு உண்டா? புதிய ஆய்வு தரும் தகவல் என்ன?கோவையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் இஎஸ்ஐ உள்ளிட்ட கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனா குறையும் என்பதில் ஐயமில்லை.
First published: October 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading