பெரிய வெங்காயம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... வெங்காயத்திற்கு மாலையிட்டு ஜனநாயக மாதர்சங்கத்தினர் கண்ணீர் அஞ்சலி

வெங்காய விலை உயர்வு சாதாரண, நடுதர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பெரிய வெங்காயம் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... வெங்காயத்திற்கு மாலையிட்டு ஜனநாயக மாதர்சங்கத்தினர் கண்ணீர் அஞ்சலி
வெங்காயத்திற்கு மாலையிட்டு ஜனநாயக மாதர்சங்கத்தினர் கண்ணீர் அஞ்சலி
  • News18
  • Last Updated: October 21, 2020, 4:13 PM IST
  • Share this:
கோவையில் பெரிய வெங்காயத்திற்கு மாலையிட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய வெங்காயங்களை ஒரு அட்டையில் ஒட்டி, அதற்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Also read... 7.5% இடஒதுக்கீடுக்காக அனைத்து கட்சிகளை அழைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



காந்திபுரம் மாதர் சங்க அலுவலகத்தில் இருந்து வெங்காயத்தை தூக்கி கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றனர். அப்போது வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாதர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பினர்.

வெங்காய விலை உயர்வு சாதாரண, நடுதர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
First published: October 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading