காவல்நிலையத்தில் சமரசம்: கட்டிய தாலியைக் கழற்றிய காதலி: விரக்தியில் புதுமாப்பிள்ளை தற்கொலை

கோவையில் காதல் திருமணம் செய்த மூன்று நாட்களில் காவல் நிலையத்தில் வைத்து தம்பதியை பஞ்சாயத்து பேசி பிரித்த காரணத்தால், மனம் உடைந்த இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவல்நிலையத்தில் சமரசம்: கட்டிய தாலியைக் கழற்றிய காதலி: விரக்தியில் புதுமாப்பிள்ளை தற்கொலை
காதல் திருமணம் செய்து கொண்ட போது எடுத்த படம்
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 3:59 PM IST
  • Share this:
கோவையில் காதல் திருமணம் செய்த மூன்று நாட்களில் காவல் நிலையத்தில் வைத்து தம்பதியை பஞ்சாயத்து பேசி பிரித்த காரணத்தால், மனம் உடைந்த இளைஞர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளைஞர் தற்கொலைக்கு காரணமான மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பேரூரை அடுத்த சென்னனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளாதேவி என்பவரும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதிக்காததால் நண்பர்கள் முன்னிலையில் சுண்டக்காமுத்தூர் கருப்பராயன் கோவிலில் வைத்து இருவரும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்கு பின்னர் இருவரும் கோவிந்தராஜ் வீட்டில் இருந்தனர். பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் கடந்த 7 ஆம் தேதி போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தம்பதி இருவரையும் பேச்சுவாரத்தைக்கு அழைத்துள்ளனர்.

படிக்க...தீபாவளி பண்டிகை: சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்பனை அதிகரிப்பு

சொத்து தொடர்பாக பேச வேண்டும் என அழைத்த நிலையில் தம்பதி இருவரும் காவல் நிலையம் சென்றனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணப்பெண் மஞ்சுளாதேவியை தனியாக உட்கார வைத்து பேசிய காவல் துறையினர், அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.கோவிந்தராஜ் மணப்பெண்ணிற்கு வாங்கி கொடுத்து இருந்த நகைகள் மற்றும் தாலி போன்றவற்றை வாங்கி கோவிந்தராஜிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

காதல் மனைவியைப் பிரித்து வைத்ததால் மனமுடைத்த நிலையில் கோவிந்தராஜ் இருந்துள்ளார். மேலும் பெண் வீட்டார் தரப்பிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை கோவிந்தராஜ் வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

படிக்க... மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி... கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

தகவலறிந்து சென்ற போலீசார் கோவிந்தராஜ் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கோவிந்தராஜின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிந்தராஜின் தாயார் மற்றும் உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அப்போது காதல் தம்பதியை பிரித்து வைக்க போத்தனூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காரணமாக இருந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். கோவிந்தராஜை தற்கொலைக்கு தூண்டிய பெண் வீட்டார் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவிந்தராஜின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமரசப்படுத்தி கலைத்தனர்.

மேலும் படிக்க...நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்

காதல் தம்பதியை மூன்று நாளில் பெண் வீட்டார் பிரித்ததால், காதலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading