கோவையில் பிடிபட்ட அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு - அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றது

கோவையில் பிடிபட்ட அதிக நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றதால் பாம்பு பிடித்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

கோவையில் பிடிபட்ட அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு - அடுத்தடுத்து 35 குட்டிகளை ஈன்றது
அதிக நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு
  • Share this:
கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இன்று காலை  அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்ட அவர், அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு சென்ற முரளி குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு ஏற்கனவே தான் கொண்டு சென்றிருந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் விடுவதற்காக இருந்த போது பிடிபட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது.

அதிக நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடிவிரியன் பாம்புஇதனால் அதிர்ச்சியடைந்த முரளி அதே பகுதியில் ஒரு ஓரமாக அந்த பையை வைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு சுமார் 35 குட்டிகளை ஈன்றுள்ளது. பின்னர் பாம்பினை குட்டிகளுடன் இன்று மாலைக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு வகையான கண்ணாடி விரியன் பாம்பு குட்டி போடும் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading