கோவையில் முதல்வரை வரவேற்பதற்காக குவிந்த வாகனங்கள்.. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்..

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

போக்குவரத்து  நெரிசலில் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கி கொண்டது. நெரிசலை தாண்டிச் செல்லமுடியாமல் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை வாகனத்தை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் முதல்வர் வருகைக்காக நேற்று மாலை ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி கொண்டது.

நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்தார். கோவை வந்த அவரை வரவேற்க ஏராளமான வாகனங்களில் அதிமுக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக நேற்று மாலை அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக விமான நிலைய சிக்னல் முதல் கொடிசியா வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும்  நிலை ஏற்பட்டது.

Also read... ரூ. 3,835 கோடி மதிப்பிலான நிலங்கள், வீட்டுமனைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.. நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு நடவடிக்கை.இந்த போக்குவரத்து  நெரிசலில் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கி கொண்டது. நெரிசலை தாண்டி செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை வாகனத்தை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக மாலை நேரத்தில் பணி முடிந்து  வீடு திரும்புபவர்கள், வீட்டுக்குச் செல்ல முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.
Published by:Vinothini Aandisamy
First published: