கோவை: பள்ளி மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியையின் கணவர் கைது

தங்கவேல் மனைவியான தலைமை ஆசிரியர் அய்யம்மாளிடம் பாதிக்கபட்ட மாணவி புகாரளித்தபோது மாணவியை அவர் அடித்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

கோவை: பள்ளி மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியையின் கணவர் கைது
மாதிரி படம்
  • Share this:
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில், தலைமை ஆசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியரான தங்கவேல் வயது(65). இவரது மனைவி அய்யம்மாள் (55) ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தங்கவேல் அவரது மனைவி அய்யாம்மாளை தினந்தோறும் காலை நேரத்தில் பணியாற்றும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

தலைமை ஆசிரியரான அய்யம்மாளை, தங்கவேல் பள்ளியில் விட்டபின்னர், மதிய நேரத்தில் பள்ளி வளாகத்திலுள்ள ஒரு அறையில் அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவியை அழைத்து பாலியல் துன்புறுத்தலில் தங்கவேல் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து தங்கவேல் மனைவியான தலைமை ஆசிரியர் அய்யம்மாளிடம் பாதிக்கபட்ட மாணவி புகாரளித்தபோது மாணவியை அவர் அடித்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.


இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி வேறு பள்ளிக்கு மாறியதால் தங்கவேல் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்குச் சென்று அந்த மாணவி குறித்து கேட்டுள்ளார். இதில் பயந்துபோன அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து தங்கவேலையும்,  அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அவரது மனைவி ஐய்யம்மாள் ஆகிய இருவரையும் மகளிர் காவல் துறையினர் கைது செய்து, அவர்கள் மீது போக்சோ மற்றும் மாணவியை மிரட்டுதல், அடித்தல் போன்ற வழக்குகளில் பதிவுசெய்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading