• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை : ஆசிரியருக்கு 26-ம்தேதி வரை காவல்; தலைமை ஆசிரியரை பிடிக்க தனிப்படைகள் விரைவு

கோவை : ஆசிரியருக்கு 26-ம்தேதி வரை காவல்; தலைமை ஆசிரியரை பிடிக்க தனிப்படைகள் விரைவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

''பள்ளி முதல்வர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது''

  • Share this:
    கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர்  தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிப்பதற்கு தனிப்படைகள் விரைந்துள்ளன. இதற்கிடையே, கைதாகியுள்ள இயற்பியல் ஆசிரியருக்கு 26-ம்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவையைச் சேர்ந்த தம்பதியின் மகள்,  தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில்  பள்ளி இயற்பியல் ஆசிரியர்,  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.

    ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை மாநகர துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் அளித்த பேட்டியில், ''ஏற்கனவே ஆசிரியர் மீது போடப்பட்ட வழக்கில் பள்ளி முதல்வரும் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. முதல்வரை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது'' என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: