கோவை துடியலூரில் யானை தாக்கியதில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு!

யானை தாக்குதலில் கடந்த இரு நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

news18
Updated: August 20, 2019, 12:16 PM IST
கோவை துடியலூரில் யானை தாக்கியதில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு!
தொழிற்சாலையின் கதவை திறந்துகொண்டு செல்லும் யானை
news18
Updated: August 20, 2019, 12:16 PM IST
கோவையில், கதவை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைக்குள் யானை ஆக்ரோஷமாக புகும் காட்சிகள் கிடைத்துள்ளன.

கோவையை அடுத்த பன்னிமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக யானை ஒன்று சுற்றி வருகிறது. இரவு நேரங்களில் யானை ஊருக்குள் வந்துவிடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தொழிற்சாலையின் கதவை உடைத்துக்கொண்டு யானை உள்ளே செல்லும் காட்சிகள், ஊர்மக்களிடையே பரவி அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த யானை தாக்கியதில் இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். யானை தாக்குதலில் பன்னிமடையைச் சேர்ந்த கணேசன் நேற்று முன்தினம்  உயிரிழந்த நிலையில், நேற்றிரவு தொப்பம்பட்டியைச் சேர்ந்த பிரேம் கார்த்தியும் உயிரிழந்தார்.

பிரேம் கார்த்தியும், அவரது நண்பர் விக்னேஷும், இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள வெட்ட வெளியில் அமர்ந்து, மது அருந்தியபோது அங்கு வந்த யானை தாக்கியுள்ளது.

Loading...இதில் பிரேம் கார்த்தி உயிரிழக்க, விக்னேஷ் தப்பியோடி உயிர்பிழைத்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டியடித்து பிரேம் கார்த்தியின் உடலை மீட்டனர்.

Also see...

First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...