கோவையில் பட்டாசு விற்பனை மந்தம் - விற்பனையாளர்கள் வேதனை

கோவையில் பட்டாசு விற்பனை மந்தம் - விற்பனையாளர்கள் வேதனை

கோவையில் பட்டாசு விற்பனை மந்தம்

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை மந்தமடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கோவையில் பட்டாசு விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்தளவே நடைபெற்று இருப்பதாகவும், பட்டாசுகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. கோவையில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே பட்டாசுகளை வாங்கி, பொதுமக்கள் வெடித்து வருகின்றனர். இந்தாண்டு பட்டாசு விற்பனை போதியளவு நடைபெறவில்லை என பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு குறைந்தளவு பட்டாசு விற்பனையே நடைபெற்று இருப்பதாகவும், கொரோனா தாக்கம் காரணமாக மக்களும் குறைந்தளவிலான பட்டாசுகளைத்தான் வாங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பட்டாசுகள் தேக்கமடைந்து இருப்பதால் தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
Published by:Rizwan
First published: