வங்கிக்குள் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

Web Desk | news18
Updated: August 1, 2019, 6:51 PM IST
வங்கிக்குள் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
விவசாயி உயிரிழப்பு
Web Desk | news18
Updated: August 1, 2019, 6:51 PM IST
கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு வந்த விவசாயி பூபதி என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் எடப்பாடி அருகே உள்ள கொங்கனாபுரம் மூப்பாதை கிராமத்தை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் விவசாயம் செய்து வருகிறார்.

பூபதியும் அவரது நண்பர்களும் பால் பண்ணை அமைக்க கோவை வங்கியில் கடன் பெற்று அட்சயா என்ற பெயரில் பால் பண்ணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்ற விவசாயி பூபதி திடீரென  உயிரிழந்துள்ளார்.பின்னர், விவசாயி பூபதியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.

Loading...

மனஅழுத்தம் காரணமாக விவசாயி பூபதி பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணையில், பூபதியும் அவரது நண்பர்களும் பால் பண்ணை அமைக்க கோவை வங்கியில் கடன் பெற்று இருந்த நிலையில் கடனை கட்டச் சொல்லி பூபதிக்கு வங்கி நிர்வாகம் நெருக்கடி கொடுத்திருக்கலாம் எனவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Also watch: மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...