பேஸ்புக்கில் பார்த்தது போல இல்லையே? நேரில் வந்த இளைஞர்... ஏற்க மறுத்த கல்லூரி மாணவி..!

பேஸ்புக்கில் பார்த்தது போல இல்லையே? நேரில் வந்த இளைஞர்... ஏற்க மறுத்த கல்லூரி மாணவி..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 24, 2019, 12:46 PM IST
  • Share this:
பேஸ்புக்கில் பழகிய இளைஞர் நேரில் வந்து காதலை சொன்னதும் பேஸ்புக்கில் பார்த்ததுபோல் இல்லையே என்று கூறி கல்லூரி மாணவி வாக்குவாதம் செய்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பலர் நேரில் பார்க்காமல் பழகி, காதலில் விழுகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் பேஸ்புக் மூலம் பழகி, நேரில் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். ஆனால், நேரில் பார்க்கும் போது பேஸ்புக்கில் அனுப்பிய புகைப்படத்தில் உள்ளதுபோல இளைஞர் இல்லாததால் கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி அருகில் நேற்றுக்காலை ஒரு கல்லூரி மாணவியிடம் இளைஞர் ஒருவர் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணை, இளைஞர் இழுப்பதும், அவர் தள்ளிவிட்டு கல்லூரிக்குச் செல்ல முயன்றதும் நடந்துள்ளது. அங்கிருந்தவர்கள் மாணவியிடம் இளைஞர் தகராறு செய்வதாக கருதி, இளைஞரிடம் விசாரித்துள்ளனர்.


ஆனால், இளைஞர் சரியாக பதிலளிக்காமல் தொடர்ந்து அந்த பெண்ணை தடுத்தும் நிறுத்த முயன்றுள்ளார். இதனால், ஆத்தரம் அடைந்த அவர்கள் இளைஞரை தாக்கினர். போலீசாருக்கும் இதுதொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் இளைஞரை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், அந்த இளைஞர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், கோவையில் படிக்கும் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டைலான உடையில், தன்னை அழகாக காட்டும் புகைப்படங்களை மாணவிக்கு, இளைஞர் அனுப்பியுள்ளார். இதனால், பழக்கம் விரைவில் காதலாக மாறியுள்ளது.

மாணவியை நேரில் சந்திக்க நேற்று கோவை வந்த இளைஞர் கல்லூரி வாசலில் மாணவியை பார்த்துள்ளார். தனது காதலையும் கூறியுள்ளார். ஆனால், நேரில் இளைஞரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவி, பேஸ்புக்கில் அனுப்பிய புகைப்படத்தில் இருப்பது போல நீங்கள் இல்லையே? என்னை ஏமாற்றுகிறீர்களா? என்று தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அங்கிருந்தவர்கள் இளைஞரை பிடித்து தாக்கியுள்ளனர்.

Loading...

பிடிக்கவில்லை என்று கூறிய மாணவியை தொந்தரவு செய்யக் கூடாது என்று இளைஞரிடம் எழுதி வாங்கிக்கொண்ட போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்மந்தப்பட்ட கல்லூரி மாணவிக்கும் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...