’தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி செயற்குழு கூட்டம் நடைபெறும்’ - அமைச்சர் ஜெயக்குமார்.. 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படியே நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

’தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி செயற்குழு கூட்டம் நடைபெறும்’ - அமைச்சர் ஜெயக்குமார்.. 
அமைச்சர் ஜெயக்குமார்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 3:18 PM IST
  • Share this:
சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு கூட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு ஆண்டும் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய விதிமுறைப்படியே நாளை செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க...எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.சரண் தகவல்..



முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டு விட்டதால் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading