கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் இருந்த கல்பனா என்ற பெண் யானை கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்தது.
41 வயதான கல்பனா என்ற பெண் யானைக்கு, வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி வளர்ப்பு யானை கல்பனா உயிரிழந்தது. உயிரிழந்த பெண் வளர்ப்பு யானைக்கு வனத்துறை ஊழியர்கள் மலர்கள் தூவியும், மலர் வளையம் வைத்தும் சல்யூட் அடித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Also read: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு
கல்பனா யானை உயிரிழந்த நிலையில், டாப்சிலிப் யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் எண்ணிக்கை 27ஆகக் குறைந்தது. கோவை வனகோட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 19 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.