சிகிச்சை அளிக்க காத்திருந்த வனத்துறையினர்.. 15 அடி உயர பாறையிலிருந்து வழுக்கி விழுந்து யானை மரணம்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காலில் காயங்களுடன் சுற்றி திரிந்த காட்டுயானை, பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை அளிக்க காத்திருந்த வனத்துறையினர்.. 15 அடி உயர பாறையிலிருந்து வழுக்கி விழுந்து யானை மரணம்...
யானை
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 2:51 PM IST
  • Share this:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நெல்லித்துறை காப்புக்காட்டு பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, முன்னங்காலில் காயத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர் கடந்த 12-ஆம் தேதி முதல் நெல்லித்துறை பகுதியில் முகாமிட்டனர்.

காட்டு யானையை பிடிப்பதற்காக சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சுயம்பு, வெங்கடேஷ் என்ற இரண்டு கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் வன எல்லையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள அடர்ந்த வனப்பகுதியின் சரிவான பகுதிகளுக்கு யானை சென்றதால், மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் காட்டு யானை சமதள பரப்பிற்கு வரும் வரை காத்திருக்க, வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். எனினும் காயம்பட்ட காட்டு யானைக்கு பழங்கள் மூலம் ஊட்டச்சத்து மருத்துகள், மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அடர் வனப்பகுதியில், 15 அடி உயர பாறையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து யானை உயிரிழந்துள்ளது.


மேலும் படிக்க...ஊரடங்கு கால குற்றங்கள்: சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு...ஏற்கனவே காயங்களுடன் இருந்த யானை, பாறையில் இருந்து கீழே விழுந்ததால் வயிறு உட்பட பல இடங்களில் காயம் அடைந்து உயிரிழந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கோவை வனப்பகுதியில், 20-வது யானை இந்தாண்டில் உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading