புத்துணர்வு முகாமில் யானையை பிரம்பால் சரமாரியாக தாக்கிய பாகன்கள் கைது

பிரம்பால் யானையை தாக்கும் கொடூர பாகங்கள்

கட்டளையை மீறி செயல்படும்போது யானைகளை அடக்க இவ்வாறு அடிப்பது வழக்கம் தான் என பாகன்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 • Share this:
  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானையை கொடூரமாக தாக்கிய பாகன்கள் கைது செய்யப்பட்டனர். தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதில், கோயில்கள், திருமடங்களில் வளர்க்கப்பட்டு வரும் 26 யானைகளுக்கு நாள்தோறும் சத்தான உணவு, நடைபயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில்,முகாமில் பங்கேற்றுள்ளன ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பிரம்பால் கால்களில் சரமாரியாக தாக்கியதில் யானை வலி தாங்க முடியாமல் துடிதுடிக்கும் வீடியோ காட்சி வெளியானது.  கட்டளையை மீறி செயல்படும்போது யானைகளை அடக்க இவ்வாறு அடிப்பது வழக்கம் தான் என பாகன்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

      

  இதையடுத்து, யானையை தாக்கிய பாகன் வினில்குமார், உதவி பாகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
  Published by:Sankaravadivoo G
  First published: