கோவையில் மாஸ்க் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் மூதாட்டி!

தினந்தோறும் சுமார் 300 முகக்கவசங்களை விஜயலட்சுமி பாட்டி தயாரித்து வருகிறார்.

கோவையில் மாஸ்க் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் மூதாட்டி!
விஜயலட்சுமி பாட்டி
  • Share this:
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லத்தில் இருந்தவாறு 65 வயது மூதாட்டி ஒருவர் முகக்கவசங்களை தயாரித்து இலவசமாக விநியோகம் செய்து வருகிறார்.

கோவை காருண்யா நகர் பகுதியில் உள்ள சிஷா முதியோர் இல்லத்தில் கடந்த 15 ஆண்டுகளாக விஜயலட்சுமி என்ற மூதாட்டி தங்கியுள்ளார். சற்று பார்வை குறைபாடுள்ள இவருக்கு தையல் தொழில் தெரியும் என்பதால், முகக்கவசம் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தால் முகக்கவசங்களைத் தயார் செய்து கொடுப்பதாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நிர்வாகம் முகக்கவசம் பொருட்கள் வாங்கிக் கொடுக்கவே, தினந்தோறும் சுமார் 300 முகக்கவசங்களை விஜயலட்சுமி பாட்டி தயாரித்து வருகிறார்.


இந்த முகக்கவசங்கள் ஆலந்துறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மூதாட்டி விஜயலட்சுமியின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்