கொரோனா அச்சுறுத்தல்: முகக் கவசத்துடன் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்!

குடிபோதையில் இருக்கிறார்களா  என சோதனை செய்ய வாயை ஊத  சொல்லக்கூடாது எனவும், அதற்கென உள்ள பிரத்யேக கருவி மூலமே சோதிக்க வேண்டும் எனவும்  காவல்  துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: முகக் கவசத்துடன் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்!
முக கவசத்துடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  காரணமாக கோவையில் இரவு பணியில் இருக்கும் காவலர்கள்  முகக் கவசம்  அணிந்தபடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கோவையில் பதற்றத்தை தடுக்க இரவு நேரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரவு நேரத்தில் காவலர்கள்  முகக் கவசம் அணிந்தபடி  முக்கிய இடங்களில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர்.

கோவை நகர்ப்பகுதிகளில் உள்ள 16 செக் போஸ்ட்களில் வாகன தணிக்கை  நடைபெறும் சூழலில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம்  அணிய வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்திய  நிலையில்  காவலர்கள் இரவு பணியின் போது முக கவசம் அணிந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதே போன்று இரவு நேரத்தில் குடிபோதையில் இருக்கிறார்களா  என சோதனை செய்ய வாயை ஊத  சொல்லக்கூடாது எனவும், அதற்கென உள்ள பிரத்யேக கருவி மூலமே சோதிக்க வேண்டும் எனவும்  காவல்  துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading