• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடிகாரர்களால் மருத்துவர் ரமேஷ் மனைவி பலியான விவகாரத்தில் போலீஸ் செய்ய தவறியவை: மருத்துவர் வீ. புகழேந்தி சாடல்

குடிகாரர்களால் மருத்துவர் ரமேஷ் மனைவி பலியான விவகாரத்தில் போலீஸ் செய்ய தவறியவை: மருத்துவர் வீ. புகழேந்தி சாடல்

போராடும் மருத்துவர் ரமேஷ்

போராடும் மருத்துவர் ரமேஷ்

  • Last Updated :
  • Share this:
    குடிபோதை நபர்கள் ஏற்படுத்திய விபத்தில் மருத்துவர் ரமேஷ் மனைவி ஷோபனா உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை சட்டரீதியாக செய்யத் தவறியவை என மருத்துவர் வீ. புகழேந்தி பட்டியலிட்டுள்ளார்.

    கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் கடந்த 24-ம் தேதி, சுற்றுச்சூழல் ஆர்வலரும், மருத்துவருமான ரமேஷின் மனைவி, தனது மகளுடன் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த மீது, மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்தார். மகள் சாந்தலா தேவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தன் மனைவியின் சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.  இதையடுத்து அந்தப் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மருத்துவர் ரமேஷ் மனைவி ஷோபனா விபத்தில் காவல்துறை சட்டரீதியாக செய்யத் தவறிய விஷயங்கள் என சமூக செயற்பாட்டாளரும்,  மருத்துவருமான வீ. புகழேந்தி பட்டியலிட்டுள்ளார்.


    1. விபத்திற்கு குடிபோதை காரணமாக இருந்ததால் போராட்டம் வெடித்தும், விபத்து ஏற்படுத்தியவர்களின் ரத்தத்தில் ஆல்ககால் அளவை உரிய நேரத்தில் பரிசோதிக்க தவறியது ஏன்?

    2. சட்டப்படி பரிசோதனை செய்து ஐபிசி 304(2) ன் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், குடிக்கவில்லை என இருக்கும் பிரிவின் கீழ் -ஐபிசி 304(ஏ)- வழக்கு தவறாக ஏன் பதிவு செய்ய வேண்டும்?

    3. குடிபோதையில் விபத்து ஏற்படுத்துவது (ஐபிசி 304(2)) பிணையில் விடுவிக்க முடியாது என இருக்க ஏன் அவர்களை பிடித்து கைது செய்யவில்லை?

    4. விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் 3 பேர் பயணித்தனர் என இருக்கையில் எப்.ஐ.ஆர்.-ல் 2 பேர் மட்டும் இருப்பது ஏன்?

    5. விபத்தை ஏற்படுத்திய வண்டியின் உரிமையாளர் யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

    6. விபத்தை ஏற்படுத்திய நபருக்கு ஓட்டுநர் உரிமம் இருந்ததா? காவல்துறை அதை உறுதிபடுத்தியதா?

    7. விபத்தை ஏற்படுத்தியவரின் விபத்து பதிவேட்டில் ஆல்ககால் மூச்சுக்காற்றில் இருந்தது உறுதிபடுத்தப்பட்டும் அதை அறிந்த பின்னாவது வழக்கை ஏன் ஐபிசி 304(2) கீழ் மாற்றவில்லை?

    8. இந்தியாவில் 70% விபத்துக்களுக்கு ஆல்ககால் காரணமாக இருக்க புகாரில் அது இல்லாவிட்டாலும் அது குறித்து விசாரணை நடத்துவது காவல்துறையின் வேலையாக இருந்தும், அதை செய்ய தவறியது ஏன்?

    9. மற்றவர்கள் தரும் தகவலின் பேரில் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காதா?

    10. ரத்தத்தில் 12 மணி நேரம் மட்டுமே ஆல்ககால் தெரியும் என இருக்கையில், எச்சில், சிறுநீரில் 5 நாள் வரை தெரியும் என இருக்கையில் அந்த பரிசோதனைகளை விபத்து ஏற்படுத்தியவரிடம் மேற்கொள்ளாதது ஏன்?

    உண்மை மட்டுமே வெல்லும் என சொல்லும் காவல்துறையின் செயல்பாடுகள் அதை பின்பற்றவில்லை என்றும், காவல்துறை இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் மருத்துவர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    First published: