மொழிப்போரை உணரவில்லை மோடி அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகத்தின் கடந்த கால வரலாறுகளை தெரியாமல், மோடி அரசு மும்மொழிக் கல்வியை கொண்டு வர முயற்சிப்பதாக ஸ்டாலின் சாடினார்.

மொழிப்போரை உணரவில்லை மோடி அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்!
திமுக தலைவர் ஸ்டாலின்
  • News18
  • Last Updated: June 12, 2019, 5:29 PM IST
  • Share this:
தமிழ்நாட்டில் நிகழ்ந்த மொழிப்போரை உணராமல், பிரதமர் மோடி அரசு மும்மொழிக் கல்வியைக் கொண்டு வர முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

திமுகவின் மூத்த முன்னோடிகளும், மொழிப்போரில் முக்கிய பங்காற்றியவர்களுமான மு.ராமநாதன் மற்றும் க.ரா.சுப்பையன் ஆகியோரது படத் திறப்பு விழா, கோவை லட்சுமி மில் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

Also read... நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது - ராதாரவி!


இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இருவரது படங்களையும் திறந்து வைத்து, மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், இந்தி திணிப்பு போராட்டத்தின் போது மு.ராமநாதன் மற்றும் க.ரா.சுப்பையனின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் கடந்த கால வரலாறுகளை தெரியாமல், மோடி அரசு மும்மொழிக் கல்வியை கொண்டு வர முயற்சிப்பதாக சாடினார்.

Also see...
First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading