டிக்டாக் ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்த தம்பதியினர் மற்றும் சில யூடியூபர்ஸ்க்கு அவரின் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா (எ) சுப்புலட்சுமி மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகிய இருவரும் ஆபாசமாக வலைதளங்களில் பதிவிடுவதாகவும், தங்களையும் மிரட்டுவதாகவும் கோவையை சேர்ந்த தம்பதியினர் புகார் அளித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழப்பட்ட புகார்களின் பேரிலும் சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் கோவை மாவட்ட காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் தற்போது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.
Also Read: கூகுள் பே பயன்படுத்தி மாமூல் வசூல் செய்யும் போலீஸ் - வைரலான வீடியோ
இந்நிலையில் ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக கூறி ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த முத்துரவி, திலகா தம்பதியினர் முதலில் புகார் அளித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக லாரன்ஸ் (மாற்று திறனாளி- யூடியூபர்), உட்பட சிலர் ஆதரவு தெரிவித்திருந்துள்ளனர்.
Also Read: அரசு மருத்துவமனை டாஸ்மாக் பாராக மாறிய அவலம்.. குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்
இந்நிலையில் சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை தொலைபேசி மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தங்களை பற்றி அவர்களது சேனல்களில் தரக்குறைவாக பதிவிடுவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா ஆகிய இடங்களில் இருப்பவர்கள் சிலரும் அவர்களது யூடிப் சேனல்களில் தங்களை பற்றி இழிவாகவும் தவறுதலாகவும் பதிவிடுதாகவும் தெரிவித்தனர்.
செய்தியாளர்: ஜெரால்ட் (கோவை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Police complaint, Rowdy baby, Youtube