கோவையில் கேமரா வாங்குவதுபோல் நடித்து கடையில் இருந்து இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமராவை திருடி சென்ற இளைஞர்!

பேனாசோனிக் சிக்மா என்னும் கேமரா மாடலை வாங்கி பார்த்து அவர், கேமராவை சோதித்துப் பார்ப்பதற்காக கடையை விட்டு வெளியே சென்றுள்ளார்

பேனாசோனிக் சிக்மா என்னும் கேமரா மாடலை வாங்கி பார்த்து அவர், கேமராவை சோதித்துப் பார்ப்பதற்காக கடையை விட்டு வெளியே சென்றுள்ளார்

  • Share this:
கோவை கிராஸ்கட்ரோடு பகுதியில் கேமரா வாங்குவது போல நடித்து இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமராவை  திருடி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கிராஸ்கட் ரோடு வடகோவை மேம்பாலம் அருகே பிரேம்சந்தர் என்பவருக்கு சொந்தமாக லட்சுமி ஃபோட்டோ சென்டர் ஏன்னும் புகைப்பட கருவிகள் விற்பனை நிலையம் மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த கடையில் கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கடைக்கு கடந்த 1ம் தேதி கேமரா வாங்குவதற்காக வாலிபர் ஒருவர் வந்துள்ளார். பேனாசோனிக் சிக்மா என்னும் கேமரா மாடலை வாங்கி பார்த்து அவர், கேமராவை சோதித்துப் பார்ப்பதற்காக கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். கடை வாசலில் படம் எடுப்பது போல பாவணை காட்டிய அவர், வேகமாக கேமராவை எடுத்துக்கொண்டு , கட்டிடத்தின் கீழ் இரு சக்கர வாகனத்தில் இருந்த நபருடன் தப்பிசென்றுள்ளார்.

கேமராவுடன் சென்ற நபர் வராததால்  பாலசுப்பிரமணியம் வெளியில் வந்து பார்த்த போது, 2.5 லட்ச ரூபாய் மதிப்புடைய கேமராவை திருடி விட்டு சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Also read: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளை நீக்குமா தமிழக அரசு?

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு கேமராவை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published: