ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட இளைஞர் கைது

முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட இளைஞர் கைது

கோபிநாதன்

கோபிநாதன்

Coimbatore : முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட கோவை இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இன்ஸ்டாகிராமில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய இளைஞரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  கோவையைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டத்தை  சேர்ந்த கோபிநாதன் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர்.

  இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாதன் அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பியுள்ளார்.

  Must Read : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் 25% முதல் 150% வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

  இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கோவை மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபிநாதனை கைது செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  ஜெரால்ட்,  செய்தியாளர், கோவை.

  Published by:Suresh V
  First published:

  Tags: Coimbatore, Crime News, Cyber crime, Youth arrested