• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்" - செவிலியர்கள் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

"நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்" - செவிலியர்கள் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்

கொரொனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என பாராட்டி பேசினார்.

  • Share this:
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் ரவீந்திரன், கொரானா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களின் சேவயை பாராட்டி அவர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செவிலியர் தினம் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர்களான செவிலியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய இடங்களில் தனித்தனியாக செவிலியர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டது. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத்துவமனையான இஎஸ்ஐ மருத்துவமனையில், மருத்துவமனை டீன் ரவீந்திரன் தலைமையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு டீன் ரவீந்திரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை டீன் ரவீந்திரன், மருத்துவர்களின் கட்டளைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்று கொரொனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என பாராட்டி பேசினார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த டீன் ரவீந்திரன், கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் முன்பாக கால்களில் விழுந்து, நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் விட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல கோவை அரசு மருத்துவமனையிலும் டீன் விமலா தலைமையில் செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: