Home /News /tamil-nadu /

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்கம்...!

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்கம்...!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்களுடன் கூடிய பரிசு தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாககோவை மாவட்டத்தில் 10.78 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
கோவையில் 10.78 லட்சம் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு ரேசன் கடையிலும் தினமும் 100 முதல்  200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்களுடன் கூடிய பரிசு தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாககோவை மாவட்டத்தில் 10.78 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியுள்ளது.

கொரொனா பரவல் இருப்பதன் காரணமாக  பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டம் கூடாமல் தினமும் 100 முதல் 200 பேர் வரை கடைக்கு வரும் வகையில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ரேசன் கடைக்கு வந்த பொது மக்கள்  வரிசையில் நின்று பரிசு தொகுப்பிகளை வாங்கி சென்றனர்.

Also read... சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்றம்!

21 விதமான பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர். கடைகளுக்கு வரும் பொது மக்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Also read... அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு...!

இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் கொரொனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் பணியானது  நடைபெற்று வருகின்றது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pongal Gift

அடுத்த செய்தி