கடந்த 6 ம் தேதி
கோவை சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே சாலையின் நடுவே பெண் சடலம் ஒன்று சிதலமடைந்த நிலையில் கிடந்தது. அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, சாலையில் கிடந்த பெண்ணின் சடலம் அந்த வழியாக சென்ற ஒவ்வொரு வாகனத்திலும் மாறி,மாறி அடிபட்டது தெரியவந்தது.
முதலில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு காரிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து, உடற்கூறாய்வு முடிவில் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லாததால் அந்த பெண் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தனிப்படை போலீசார் வந்தனர்.
அதன்பிறகு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த வழியாக சென்ற வாகனங்களின் விவரங்களை சேகரித்து விசாரணையில் இறங்கினர்.
திருவள்ளூர் மாவட்ட வாகன பதிவெண் கொண்ட ஒரு கார் உரிமையாளரை முதலில் சந்தேகித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெண்ணின் சடலம் இனோவா கார் ஒன்றில் இழுத்து சென்ற காட்சி இடம்பெற்றிருந்தது. விசாரணையில் அந்த கார் கோவை அருகே உள்ள காளப்பட்டி பகுதியை சேர்ந்த பைசல் என்பவருடையது என தெரியவந்தது.
Also read: திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. காவல் துறையினர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு..
ஆனால் விபத்தை ஏற்படுத்தியதை பைசல் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே பைசலின் கார் சமீபத்தில் பட்டணம் பகுதியில் உள்ள ஒரு கார் பழுதுநீக்கும் கடையில் விடப்பட்டதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கு சென்று விசாரித்த போது பைசலின் காரில் சேலையின் ஒரு பாகம் சிக்கியிருந்ததாக மெக்கானிக் கூறியிருக்கிறார்.
அதன்பிறகு பைசலிடம் துருவி துருவி நடத்திய விசாரணையில் சாலையை கடக்க முயன்ற பெண் தன்னுடைய காரில்தான் அடிபட்டு இறந்தார் என ஒப்புக்கொண்டார்.
கடந்த 6ஆம் தேதியன்று அதிகாலை காளப்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதாகவும், உடனே நிற்காமல் சென்று விட்டதாகவும் பைசல் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு பைசலை காவல்துறையினர் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்தவர் சாலையோரம் தங்கும் ஆதரவற்ற மூதாட்டி என்பதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.