Home /News /tamil-nadu /

இரண்டாவது கணவர் ஏமாற்றியதால் வழக்கு போட்ட இளம்பெண்.. இலவசமாக வழக்கு நடத்துவதாக கூறி பாலியல் அத்துமீறிய வக்கீல்

இரண்டாவது கணவர் ஏமாற்றியதால் வழக்கு போட்ட இளம்பெண்.. இலவசமாக வழக்கு நடத்துவதாக கூறி பாலியல் அத்துமீறிய வக்கீல்

கொங்கு தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் விஜயகுமார்

கொங்கு தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் விஜயகுமார்

Coimbatore : குடும்ப பிரச்சினையால் வழக்குக்காக வந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழகறிஞரும் கொங்கு தமிழர் பேரவையின் தலைவருமான விஜயகுமார் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குக்காக வந்த பெண்ணை பாலியல்  துன்புறுத்தல் செய்ததாக வழக்கறிஞரும், கொங்கு தமிழர் பேரவை என்ற அமைப்பின் தலைவருமான  விஜயகுமார் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்த  31 வயது பெண் ஒருவர் முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் கடந்த ஆண்டு பார்த்திபன் என்பவரை  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த நபர், 31 வயது பெண்ணின் 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் ஆகியவற்றை வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகின்றது. இரண்டாவது கணவரால் ஏமாற்றப்பட்ட அந்த 31 வயது பெண், இது தொடர்பான பிரச்சினைக்காக  கொங்கு தமிழர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனரும், வழக்கறிஞருமான விஜயகுமார் என்பவரை சந்தித்துள்ளார்.

இந்த வழக்கினை விஜயகுமார் நடத்தி வந்த நிலையில் அந்த 31 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கொங்கு தமிழர் பேரவை அமைப்பின் நிறுவனரும், வழகறிஞருமான விஜயகுமார் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

பணம் வாங்காமல் வழக்கை நடத்தி கொடுப்பதாக உறுதியளித்த விஜயகுமார், 40 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை வாங்கி இருப்பதுடன், தொடர்ந்து  பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகின்றார் எனவும், தனியாக வசிக்கும் தனது வீட்டின் முன்பு சத்தம் போடுவதாகவும், வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என கூறி தனியாக அலுவலகத்திற்கு வரச்சொல்லி தன்னிடம் அத்துமீறியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

Read More : இனி ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் இதுதான்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

அவரது நடவடிக்கைகள் காரணமாக வழக்கு தொடர்பாக அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்த நிலையில், தனக்கு உதவும் வேறு வழகறிஞர்கள் மீது தன் பெயரில் அவதூறாக கடிதம் எழுதி வழகறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி இருப்பதாகவும், தொடர்ந்து பல்வேறு வகைகளில் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஆசைக்கு இணங்க வேண்டும் என அச்சுறுத்தி, மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

Must Read : டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு

இந்த புகாரினை பெற்ற கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார், வழகறிஞர் விஜயகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் உட்பட 3 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கை நடத்த கேட்டு வந்த பெண்ணிடம் வழகறிஞர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Lawyers, Sexual harassment

அடுத்த செய்தி