என் மருமகன் தவறு செய்தால் தவறுதான்; நான் அந்தப் பெண்ணைப் பார்த்ததே கிடையாது - கோவை தங்கம் பரபரப்பு பேட்டி

பெண் தொழிலதிபர் கொடுத்த புகார்: பின்னணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர்.. கோவை தங்கம் பரபரப்பு பேட்டி!

கோவையைச் சேர்ந்த பெண் தெரிவிக்கும் புகாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவை தங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
கோவையை சேர்ந்த சிந்துஜா என்ற பெண் பண விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் சென்னையில் இருக்கும் 3 பேர்தான் காரணம் என  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த சிந்துஜா என்ற பெண் தொழிலதிபர், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் மீது புகார் கொடுத்து இருந்தார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பிரமுகருமான கோவை தங்கமும் அவரது மகளும் தன்னை மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் சிந்துஜா அளித்த பேட்டியில் ’கோவை தங்கம் குறித்து குறிப்பிட்டு இருந்த நிலையில் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Also read: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - திருவாரூரில் பரபரப்பு

அப்போது சிந்துஜா என்ற பெண்ணை தான் பார்த்தது கிடையாது என்றும் தொலைபேசியில் கூட பேசியது கிடையாது எனவும் பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அபாண்டமாக அந்த பெண் புகார் கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார். அந்த பெண் சொல்வதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என தெரிவித்த அவர்,  புகார் கொடுத்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக இதை அந்த பெண் சொல்கின்றார்.

கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில்தான் இருந்தேன். என் மீது அபாண்டமாக புகார் தெரிவித்து இருக்கின்றனர். அந்த பெண்ணின் வீடே எனக்கு தெரியாது என தெரிவித்த அவர் அவர்களிடம் நான் பேசியதற்கு சின்ன ஆதாரத்தை காட்டினால் கூட போதும் எனவும் தெரிவித்தார்.

சட்டம் தன் கடமையை செய்யவில்லை என்றால் இந்த கலாச்சாரம் வேகமாக பரவும் என கூறிய அவர், அந்த பெண்ணின் குடும்பத்தில் இருந்தும் யாரும் இதுவரை என்னிடம் பேசவில்லை எனவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கோவை தங்கத்தை இழுக்க சொல்லி அரசியல் கட்சியினர் சிலர் அந்த பெண்ணிற்கு சொல்லி இருக்கின்றனர் என்று தெரிவித்த அவர், அந்த பெண் மீது கோவை நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Also read: இன்ஸ்டாவில் ஆபாச படங்களை அனுப்பக்கோரி சிறுமிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள்!

எனது மருமகன் ஓட்டல்  நடத்தினார். அதற்கு நான் போனதே இல்லை என் மகளும் போனதில்லை என தெரிவித்த அவர், எனது மருமகன் தவறு செய்தாலும் தவறுதான் எனவும், அதற்கு என் பெயரை ஏன் இழுக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் சென்னையில் இருக்கும் 3 பேர் இதன் பின்னணியில் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார். தமிழ்மாநில காங்கிரஸில் இருக்கும் கோவையை சேர்ந்த அஸ்வின் இந்த பிரச்சினையின் பின்னணியில் இருக்கின்றார் எனவும் கோவை தங்கம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் கோவை தங்கம் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published: