• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துடியலூரில் ஹாயாக வாக்கிங் செல்லும் காட்டு யானைகள்

துடியலூரில் ஹாயாக வாக்கிங் செல்லும் காட்டு யானைகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

துடியலூரில் இரண்டு யானைகள் தெருக்களில் இருந்த மரங்களின் கிளைகளை  உடைத்து சாப்பிட்டபடி சர்வசாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

  • Share this:
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் காட்டு யானைகள் தெருக்களில் சர்வ சாதாரணமாக நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் துடியலூரை  அடுத்த பன்னிமடை லட்சுமி நகர் பகுதியானது மலையடிவாரத்தில்  ஒரு அமைந்துள்ளது. வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள்  கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. வெள்ளிக்கிழமை இரவு 2 காட்டு யானைகள் சர்வசாதாரணமாக தெருக்களில் நடந்து வந்தது. குடியிருப்பு பகுதிகளின்  வழியாக சென்ற யானைகள் அங்கிருந்த வாழைத் தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காட்டு யானைகள் தெருக்களின் வழியாக நடந்து சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இரண்டு யானைகள் தெருக்களில் இருந்த மரங்களின் கிளைகளை  உடைத்து சாப்பிட்டபடி சர்வசாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு வனத்துறையினர் அந்த  யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: