கோவையில் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் உயிரிழந்த காட்டு யானை; கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

கோவையில் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் உயிரிழந்த காட்டு யானை; கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

ஆனைகட்டி வனப்பகுதியில் சேம்புகரை என்ற இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிர் இழந்து கிடந்தது.

  • Share this:
கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் காரணமாக உயிரிழந்த காட்டு யானையின் உடல் வனத்துறையினரால் எரியூட்டப்பட்டது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் சேம்புகரை என்ற இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிர் இழந்து  கிடந்தது. அந்த யானையை வனத்துறையினர் பார்த்த போது வாய் மற்றும் ஆசன வாய் பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறி இருந்தது. இது ஆந்த்ராக்ஸ் அறிகுறி என்பதால், யானையின் இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஆந்த்ராக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று முழு கவச உடை அணிந்த வன ஊழியர்கள் யானையின் உடல் மீது பார்மலின் ரசாயனத்தை ஊற்றி யானையின் உடலுக்கு தீ வைத்து எரித்தனர்.

Also read: பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் நெத்தியடி - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்

இதனிடையே ஆந்த்ராக்ஸ்  தொற்றால் யானை உயிரிழந்தது  குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சேம்புக்கரை வனப்பகுதியை சுற்றி எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உத்திரவிடப்பட்டது. உடனடியாக இன்றே கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும்  பணிகளை துவங்கினர்.

முதல் கட்டமாக அணை மேடு பகுதியில் இன்று 250 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ச்சியாக யானை இறந்து இருந்த இடத்தை சுற்றி இருக்கக் கூடிய மற்ற கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள்  தீவிரப்படுத்தபட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published: