மேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' காட்டு யானை அடர் வனப்பகுதிக்குள் சென்று விட்டதால், யானையை பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வனத்துறை மருத்துவ குழுவினர் தொடர்ந்து பாகுபலி யானையை கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக விளைநிலங்களை சேதப்படுத்தியபடி சுமார் 40 வயது மதிக்கதக்க காட்டு யானை சுற்றி தி்ரிகின்றது. இந்த காட்டு யானையை பாகுபலி என பெயரிட்டு பொது மக்கள் அழைக்கின்றனர். இந்த பாகுபலி காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. வேடர்காலனி அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் 5 மருத்து குழுவினருடன் முகாமிட்டுள்ளனர்.
துப்பாக்கி , மயக்க ஊசிகளுடன் வனத்தில் பாகுபலி யானையை கண்காணித்து பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த ஆபரேசனுக்கு MP20T1 என வனத்துறையினர் பெயரிட்டுள்ளனர். பிற்பகல் ஒரு மணி வரை காட்டு யானையை கண்காணித்த நிலையில் தற்போது யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பாகுபலி காட்டு யானையை பிடிக்க வெங்கடேஷ், கலீம், மாரியப்பன் ஆகிய 3 கும்கி யானைகள் பயன்படுத்தபட்டுள்ளது.
Also Read: விஜய் முதல் டாப்சி வரை: நடிகர், நடிகைகள் நடத்தும் வெற்றிகரமான பிஸினஸ்கள்!
காலை 6 மணிக்கு யானையை பிடிக்கும் பணிகள் துவங்கிய நிலையில் மாலை வரை நீடித்தது. 5 குழுக்களாக பிரிந்து பாகுபலி யானையை பின் தொடர்ந்தும் அதை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட வில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த கோவை மாவட்ட வன அலுவலர வெங்கடேஷ், தற்போது பாகுபலி யானை வனப்பகுதியில் மலையடிவாரத்தில இருக்கின்றது எனவும், சமதளம் அல்லது சாலை பகுதிக்கு வந்தால்தான் ரேடியோ காலர் பொருத்த முடியும் என தெரிவித்தார்.
யானை அடர் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்தால் மட்டுரே ஆப்பரேசன் நடத்தப்படும் எனவும், இல்லையெனில் கண்காணிப்பு பணி மட்டுமே நடைபெறும் என தெரிவித்த அவர், டிரோன் மூலமும் யானை கண்காணிக்கப்படுகின்றது என தெரிவித்தார். 5 டாக்டர்கள் கொண்ட குழு வனப்பகுதியில் கண்பாணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என கூறிய அவர், பாகுபலி காட்டு யானை திடகாத்திரமாக இருக்கின்றது எனவும் சென்சிடிவான யானையாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியவில்லை என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்த பின்னர் அதற்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு பின்னர் மீண்டும் வனப் பகுதியிலேயே விடுவிக்கப்படும். ரேடியோ காலர் மூலம் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்வதற்கும் , யானை நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கும் இந்த ரேடியோ காலர் உதவும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bahubali, Coimbatore, Elephant, Mettupalayam, Wild Animal