பழகிய நான்கு நாட்களில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது...

பழகிய நான்கு நாட்களில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது...

மாதிரிப்படம்

கோவை அருகே பழகிய நான்கு நாட்களில் கள்ளகாதலுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணையும், கள்ளகாதலனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

 • Share this:
  கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் நாகராஜன். இவரது முதல் மனைவி இறந்து விடவே கடந்த 8 மாதங்களுங்கு முன்பு மதுக்கரை பகுதியை சேர்ந்த விதவையான அமுதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மதுக்கரையில் அமுதா இல்லத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சீரப்பாளையம் பகுதியில் உள்ள அமலன் மினரல்ஸ் என்ற கோலப்பொடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். நிறுவனத்திலேயே தங்கி கோலப்பொடியினை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

  அந்த நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்கு வந்த அமுதாவிற்கும் சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியில் சென்று இருந்த நாகராஜன் நேற்று அதிகாலை தங்கியிருந்த கம்பெனிக்கு வந்த போது சங்கரும் அமுதாவும் ஒன்றாக இருந்துள்ளனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த நாகராஜ் , சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே கையில் வைத்திருந்த சுத்தியலால் சங்கர் தாக்கியுள்ளார்.
  இதில் தலையில் காயம் ஏற்பட்டு நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதையடுத்து நிறுவன வளாகத்தில் இருந்த மண்ணை போட்டு நாகராஜனின் உடலை சங்கரும், அமுதாவும் மூடி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நடந்த சம்பவம் குறித்து நிறுவன உரிமையாளரிடம் தெரிவிக்கவே, காலை 10 மணி அளவில் அவர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மண் போட்டு மூடி வைத்திருந்த நாகராஜனின் சடலத்தை மீட்டனர்.

  மேலும் படிக்க... தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது: உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

  இதனையடுத்து அங்கிருந்த சங்கர் மற்றும் அமுதாவை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கரும் அமுதாவும் பழகிய நான்கு நாட்களிலேயே இந்த கொலை சம்பவமானது நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட சங்கர், அமுதா ஆகிய இருவரிடமும் மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கணவர் மூலம் அமுதாவிற்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: