கோவை குற்றாலம் எப்போது திறக்கப்படும்?: எதிர்பார்ப்பில் வாழ்வாதாரத்தை இழந்த சிறு வியாபாரிகள்!

கோவை குற்றாலம்

“கோவை குற்றாலத்துக்கு வழக்கமாக வரும் சுற்றுலா பயணிகள் பயணிகளால் தினமும் 500 ரூபாய்க்கு வியாபாரம் செய்து பிழைத்து வந்தோம். கொரோனா பிரச்சனை துவங்கியது முதல் எங்களது வாழ்வாதாரமே கேள்விக் குறியாகி உள்ளது. 

  • Share this:
    கோவை குற்றாலம் விரைவில் திறக்கப்பட வேண்டும் என வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் உள்ளூர் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா தளத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு சிறு வியாபாரிகள் கடும் பின்னடைவை சந்தித்தனர். பொதுவாக பழங்குடி கிராமம் மற்றும் அருகே உள்ள சிறு சிறு கிராமங்களை சேர்ந்த வியாபாரிகள் பேருந்து மூலமாக கோவை கடைவீதிக்குச் சென்று உணவுப்பண்டங்களை வாங்கி வந்து கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    தினமும் 400 முதல் 500 ரூபாய் வரை மட்டுமே சம்பாதித்து தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்தனர். ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரம் இல்லாமல் அருகே உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள காரணத்தினால் கோவை குற்றாலத்தில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Also Read:  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை வரும்?

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, “கோவை குற்றாலத்துக்கு வழக்கமாக வரும் சுற்றுலா பயணிகள் பயணிகளால் தினமும் 500 ரூபாய்க்கு வியாபாரம் செய்து பிழைத்து வந்தோம். கொரோனா பிரச்சனை துவங்கியது முதல் எங்களது வாழ்வாதாரமே கேள்விக் குறியாகி உள்ளது.  தோட்ட வேலைக்கும் செல்ல முடியவில்லை, வியாபாரமும் செய்ய முடியவில்லை இதனால் எங்களது உணவிற்கே சிரமப்பட்டு வருகிறோம். எப்போது கோவை குற்றாலம் திறப்பார்கள் என தினமும் செய்தித்தாள்களை பார்த்து வருகிறோம்.

    விரைவில் கோவை குற்றாலம் திறக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே அதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் மீண்டும் இந்த சுற்றுலாத்தலங்கள் திறந்தால் மட்டுமே எங்களது இயல்பு வாழ்க்கை துவங்கும், எங்களைப்போன்ற வியாபாரிகள் மாங்காய், சிப்ஸ் உள்ளிட்ட உணவுப்பண்டங்களை கோவை கடைவீதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம்.

    Also Read:    ஜப்பானை மிரட்டும் டெல்டா வேரியண்ட்.. டோக்யோவில் அவசர நிலை பிரகடனம்: ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்ன பாதிப்பு?

    இதுவரை பேருந்துகள் இல்லாமல் இருந்தது, தற்போது பேருந்து போக்குவரத்தும் துவங்கி உள்ளது. அதேபோல் சுற்றுலா தளங்களும் திறந்துவிட்டால் எங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்,  அரசு வழங்கும் நிவாரண நிதியை வைத்து வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறோம். மேலும் ரேஷன் பொருட்கள் மட்டுமே எங்களது தினசரி உணவாக உள்ளது.

    Also Read:  தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

    கோவை குற்றாலத்தில் சாடிவயல் சீங்கப்பதி, வெள்ளப்பதி,  உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த 50 பேர் பணியாற்றி வருகின்றனர். கோவை குற்றாலத்துக்கு வரும் பயணிகளை சோதனை செய்வது வனப் பகுதிகளுக்குள் இருக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த கொரோனா காரணத்தால் இரண்டு மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டு பழங்குடி பணியாளர்களும் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதேபோல் சுற்றுலா தலத்திற்கு வரும் பயணிகளை வைத்தே இங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியுள்ளனர். கோவையில் இருக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் கோவை குற்றாலம் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    வைரம் பெருமாள் அழகுராஜன் - கோவை செய்தியாளர்
    Published by:Arun
    First published: