Home /News /tamil-nadu /

திமுக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் - பொள்ளாச்சி ஜெயராமன்

திமுக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

ஊழலில் திளைக்கின்ற தி.மு.க ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

    லஞ்ச லாவண்ய ஊழலில் விளைகின்றன திமுக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். 

    அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    Also Read:  தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?

    நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் துணை சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்ஜிஆர், தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் ஏழை எளிய மக்களுக்கு விட்டுவிட்டுச் சென்றார். தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க ஆட்சியில் லஞ்ச லாவண்யம், ஊழலில் திளைக்கின்ற தி.மு.க ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    Also Read: அவதூறு பரப்புவோர் விடுதலை.. நீதிபதிகளை கடுமையாக சாடும் கி. வீரமணி

    போலீசாரை கைப்பாவையாக கொண்டு செயல்பட்டு பொய் வழக்குப் போடும் ஆட்சிக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்த ஜெயராமன் கோதவாடி குளக்கரை பிரச்னையில் அ.தி.மு.க-வினர் கூட்டம் கூடியதாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் திமுகவினர் சேர்ந்த கூட்டத்திற்கு எந்த வழக்கும் போலீசார் பதிவு செய்யப்படவில்லை. என் மீது போடப்பட்ட வழக்கை எதிர்கொள்ள நீதிமன்றத்திற்கு செல்வேன் என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, DMK, MKStalin, Pollachi, Pollachi Jeyaraman

    அடுத்த செய்தி