• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா சகிச்சையில் கட்டண கொள்ளை: முழு கட்டணத்தை செலுத்தாமல் நோயாளியை விட மாட்டோம்: தனியார் மருத்துவமனை அடாவடி!

கொரோனா சகிச்சையில் கட்டண கொள்ளை: முழு கட்டணத்தை செலுத்தாமல் நோயாளியை விட மாட்டோம்: தனியார் மருத்துவமனை அடாவடி!

கோவையில் முழு கட்டணத்தை கட்டாமல் நோயாளியை விட மாட்டோம் என தனியார் மருத்துவமனை அடாவடி

கோவையில் முழு கட்டணத்தை கட்டாமல் நோயாளியை விட மாட்டோம் என தனியார் மருத்துவமனை அடாவடி

சிகிச்சைக்கு மொத்தமாக 2 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் தான் இங்கு சேர்த்தாகவும், தங்களிடம் வேறு பணம் இல்லை என்று கவிதவின் மகள் கோமதி மருத்துவமனை நிர்வகத்திடம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பெண்ணை முழு கட்டணம் செலுத்தினால்தான் விடுவிப்போம் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பதாக புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் தலையிட்டு சிகிச்சை பெற்ற பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை மாவட்டம் தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர் கொரொனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் 25ம் தேதி ரிச்மண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரொனா தொற்று சிகிச்சைக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கவிதாவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    ஜூன் 4ம் தேதி வரை சிகிச்சை கட்டணமாக 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தொகையை கட்டணமாக செலுத்திய நிலையில், கவிதாவின் சிகிச்சைக்கு மொத்தமாக கட்டணம் 5,69,120 ரூபாய் ஆகும் எனவும், ஏற்கனவே கட்டியது போக மீதமுள்ள 3,09,120 ரூபாயை கட்ட வேண்டும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா சிகிச்சைக்கு மொத்தமாக 2 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் தான் இங்கு சேர்த்தாகவும், தங்களிடம் வேறு பணம் இல்லை என்று கவிதவின் மகள் கோமதி மருத்துவமனை நிர்வகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை கட்டினால் மட்டுமே கவிதாவை விடுவிப்போம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, கவிதாவின் மகள் கோமதி இது குறித்து சுகாதார துறை மற்றும் கொரொனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, நேற்றிரவு கவிதா மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    சிகிச்சையில் இருந்தவரை கட்டணம் செலுத்தாமல் விடுவிக்க முடியாது என ரிச்மண்ட் மருத்துவமனை நிர்வாகம் பிடித்து வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக ரிச்மண்ட் மருத்துவமனை தரப்பு விளக்கத்தை கேட்க முயற்சித்தோம். எனினும், மருத்துவமனை தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: