கொங்கு மண்டல திமுகவில் வலுவான எண்ணிக்கையில் தலைவர்கள் இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றோம்: கார்த்திகேய சிவசேனாபதி

கோவை

கொங்கு மண்டல திமுகவில் வலுவான எண்ணிக்கையில் தலைவர்கள்  இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றோம் என திமுக சுற்று சுழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.

  • Share this:
கோவையில் திமுக சுற்றுசுழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இன்று குளங்களை ஆய்வு செய்தார். வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சிகுளம் உட்பட பல்வேறு குளங்களை சுற்று சூழல் ஆர்வலர்களிடம் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நியூஸ் 18 சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த கார்த்திகேய சிவசேனாபதி, கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் பணிகளுக்காக குளங்களின் அளவுகள் குறைக்கப்பட்டுள்ளது எனவும், ஸ்மார்ட்சிட்டி மாஸ்டர் பிளானை இதுவரை வெளிப்படையாக வெளியிட வில்லை எனவும் தெரிவித்தார்.

கோவையில் உள்ள குளங்களின் அளவு  15  முதல் 17 சதவீதம் வரை  குறைக்கப்பட்டுள்ளது ஆவணங்கள் மூலம்  தெரியவந்துள்ளது என தெரிவித்தார். சுற்று சுழல் ஆர்வலர்களின் கருத்துகள் முதல்வர் மற்றும் சுற்று சுழல் அமைச்சர்களின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது கொங்கு மண்டலப்பகுதிகளில் சொல்லப்பட்டவை மக்களிடம் சென்றடையவில்லை என கூறிய அவர், எங்களின் கட்டமைப்பையும்  பலப்படுத்த வேண்டும் எனவும், திமுக முன்பு வலுவாக இருந்த பகுதி இந்த கொங்கு மணடலம் எனவும் தெரிவித்தார்.

இப்போது இங்கு திமுக  தலைவர்களின் எண்ணிக்கை  வலுவாக இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றோம் என கூறிய அவர், அதற்காக வேலை செய்து கொண்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். தற்போது திமுக தலைவரின் செயல்பாட்டை பார்த்து இவருக்கு வாக்களிக்க வில்லையே என கொங்குநாட்டு மக்கள் பலர் வருத்தப்பட்டு வருகின்றனர் என தெரிவித்த அவர், வரும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் நிச்சயம் கொங்கு மண்டலத்தில் பெரு வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை எல்லாம் கிடையாது என்றும் கொங்கு மண்டலத்தில் திமுக  18 சீட் பெற்று இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார். கோவை, சேலத்தில் மிகபெரிய சக்திகளாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரின் அதிகார பலம் , ராபின்வுட் மாதிரி கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து தவறான பார்மூலாவை உருவாக்கி, அந்த பார்மூலா மூலம்  வெற்றி பெற்றனர் என தெரிவித்தார்.

கோவை


அதிமுக கொங்கு மண்டலத்தில் பெற்றது நியாயமான வெற்றியல்ல, ஒரு சட்டமன்ற தேர்தலில் 150 கோடி வரை செலவு செய்வது சரியானது அல்ல எனவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்த முறைகேடுகள் குறித்து இதுவரை தனக்கு 960 இ - மெயில் வந்திருக்கின்றது எனவும், இவற்றை மொத்தமாக ஆவணப்படுத்தி தமிழக முதல்வர் நியமித்துள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகருக்கு அனுப்பியுள்ளதாகவும், தமிழக அரசு அந்த ஆவணங்களை பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...Corona | கொரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன - அமைச்சர் சுப்பிரமணியன்

கொரொனா தொற்று காரணமாக இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தோம் எனவும் இனிமேல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்த ஊழல், எடப்பாடி பழனிச்சாமியின் மந்திரி சபையில் இருந்த மந்திரிகள் செய்த ஊழல் ஆகிவற்றை வெளிக்கொண்டு வருவோம். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றது. விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக சுற்றுசுழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published: