Home /News /tamil-nadu /

ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியார் அணை

ஆழியார் அணை

ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 9 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 120 அடி கொண்ட ஆழியார் அணை தற்பொழுது 119 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி ஒன்பது மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வால்பாறை காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியார் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை தற்பொழுது 119 அடியை எட்டியுள்ளது.

    இதனையடுத்து ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 9 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு நவமலை வழியாக ஆழியார் அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 3600 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

    இதனால் ஆழியாறு அணையின் 9 மதகுகள் வழியாக வினாடிக்கு 1600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் கோபாலபுரம் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


    Must Read : கெடிலம் அற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார்.. இரண்டாவது நாளாக தேடுதல் பணி தீவிரம்

    அதேபோல் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் செல்லும் அணைக்கட்டு பகுதிகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குளிக்க வருவதால் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், ஆழியார் காவல் நிலைய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அணைக்கட்டு பகுதிகளில் பார்வையிட சென்ற மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - ம.சக்திவேல், பொள்ளாச்சி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Pollachi, Water

    அடுத்த செய்தி