கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மே 20ஆம் தேதி முதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன என்று விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து முறையே மே 20 மற்றும் 27 ஆகிய தேதி முதல் தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது.
பெங்களூரில் இருந்து கோவை மாநகருக்கு ஜூன் 3ஆம் தேதி முதல் தினசரி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. விஸ்தாரா விமானச் சேவைகள் மூலமாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் 31ஆவது மாநகரம் கோவை ஆகும்.
கட்டணம் எவ்வளவு
டெல்லியில் இருந்து கோவைக்கு ரூ.5,899 முதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் ரூ.4,299 என்ற அளவிலும், பெங்களூருவில் இருந்து ரூ.3,849 என்ற அளவிலும் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
விமானச் சேவைகளின் நேரம்
டெல்லியில் இருந்து முற்பகல் 11.45 மணிக்கு புறப்படும் விமானம் கோவைக்கு 14.40 மணிக்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக கோவையில் 15.15 மணிக்கு புறப்படும் விமானம் டெல்லிக்கு 18.20 மணிக்கு சென்றடையும். மும்பையில் இருந்து 11.50 புறப்படும் விமானம் கோவைக்கு 13.35 மணியளவில் வந்தடையும். மறு மார்க்கமாக 14.10 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு 16.00 மணிக்கு சென்றடையும். இதேபோன்று கோவையில் இருந்து 7.10 மற்றும் 19.25 ஆகிய நேரங்களில் தலா ஒரு விமானம் பெங்களூருக்கு செல்கின்றன. மறு மார்க்கமாக 8.35 மற்றும் 20.55 ஆகிய நேரங்களில் பெங்களூரில் இருந்து கோவைக்கு விமானங்கள் புறப்படுகின்றன.
உயர் பாதுகாப்பு விதிமுறைகள்…
சமீபத்தில் ஏரோஸ்பேஸ் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் என்ற நிறுவனத்துடன் விஸ்தாரா நிறுவனம் கைகோர்த்தது. அதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக உயர் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான RFIDAeroCheck என்ற டெக்னாலஜியை விஸ்தாரா நிறுவனம் அமல்படுத்தியது.
Also Read : மைலேஜ் சேலஞ்சில் அசத்திய யமஹா ஸ்கூட்டர்கள்..
விமானங்களில் உயிர் பாதுகாப்பு சாதனங்கள் இருப்பதை இந்த டெக்னாலஜி உறுதி செய்வதுடன், அவற்றின் காலாவதி தேதி குறித்தும் அவை முறையாக கண்காணிக்கும். உயிர் காக்கும் சாதனங்கள் தொடர்பான தகவல்களை, அப்ளிகேஷன் அடிப்படையிலான டேட்டாபேஸ் அடிப்படையில் சேமித்து வைப்பதன் மூலமாக அது சாத்தியமாகிறது. இது தவிர விமானத்தின் லொகேஷன், முக்கிய பாகங்களின் கான்பிகிரேஷன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த தகவல்களை இந்த டெக்னாலஜி கண்காணித்துக் கொண்டிருக்கும்.
Also Read : கடந்த நிதியாண்டை விட ஏர் கார்கோ இயக்கத்தில் 30% உயர்வை கண்ட மும்பை விமான நிலையம்!
உடனுக்குடன் பரிசோதனை
RFIDAeroCheck டெக்னாலஜி மூலமாக பயணிகளின் உடைமைகளை ஒருசில நிமிடங்களில் முழுமையாக பரிசோதனை செய்ய முடியும். எதிர்கால தேவைகள் குறித்த தகவல்கள் மற்றும், சமயத்திற்கு தகுந்த டேட்டா உள்ளிட்டவற்றை இது கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, போயிங் 787 விமானத்தை ஒட்டி, கீழே நடந்து செல்லும் ஒரு சில நிமிடங்களில் அதை முழுமையாக இந்த டெக்னாலஜி பரிசோதனை செய்து விடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.