Home /News /tamil-nadu /

கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடி... அச்சத்தில் மக்கள்

கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடி... அச்சத்தில் மக்கள்

கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடி

கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, கரடி போன்றவை நகர் பகுதிகளுக்குள் நடமாடி வருகின்றது.

  • News18
  • Last Updated :
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, கரடி போன்றவை நகர் பகுதிகளுக்குள் நடமாடி வருகின்றது.

யானைகள் தண்ணீர் மற்றும் உணவிற்காகவும், சிறுத்தைகள் நாய்களை வேட்டையாடுவதற்காவும் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதே போல கரடிகளும் இரவு நேரங்களில் வனப்பகுதி அருகில் இருக்கும் கிராமங்களில் புகுந்து உணவிற்காக நடமாடி வருகின்றன.

கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வ சாதாரணமாக கரடிகள் உலா வருகின்றன.

Also read... பண்ணை வீட்டில் ஆடிட்டர் வெட்டி படுகொலை.. முன் விரோதம் காரணமா? - தஞ்சையில் பரபரப்பு

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் நேற்றிரவு இரவு கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது. அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை கரடி சிறிது நேரம் தட்டியது.பின்னர் அருகில் உள்ள தெருவிற்கு சென்று அங்கும் வீட்டின் கதவை தட்டியுள்ளது. இந்த காட்சிகள்   கிராமத்திலுள்ள சிசிடிவி  கேமராவில் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் கரடியின் நடமாட்டம் கிராம மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.

வனத்துறையினர்  கரடியை கண்கானித்து அடர்  வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி