கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் கிராம வி.ஏ.ஒ அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உதவியாளரை காலில் விழ வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே ஊரை சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று அதே ஊராட்சிக்குட்பட்ட கோப்ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தன்னுடைய சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ஆன் லைனில் விண்ணப்பித்து வர வேண்டும் என கூறிய நிலையில் கிராம நிர்வாக அலுவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
Also Read: ரேஷன் அரிசி கடத்துனேன் வண்டியை பிடிச்சுட்டாங்க.. என்ன செய்யலாம்?- தலைமை காவலரிடம் ஐடியா கேட்கும் கடத்தல்காரரின் வைரல் ஆடியோ
வி.ஏ.ஓ அலுவலகத்தில் கோபிநாத் சப்தம் போட்டு கலைச்செல்வியை அச்சுறுத்தும் விதமாக பேசவே, உதவியாளர் முத்துசாமி ஒரு பெண் அரசு அலுவலரிடம் இப்படி பேசக்கூடாது எனவும் முறையான ஆவணங்களை கொண்டு வரும்படியும் கூறியுள்ளார்.
Also Read: ‘என் கடினமான காலங்களில் உதவியவர்கள்’ - 150 லாரி ஓட்டுநர்களுக்கு விருந்து படைத்த மீரா பாய் சானு
இந்நிலையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி மீது கோபமடைந்த கோபிநாத், அவரை கடுமையாக திட்டி எச்சரித்துள்ளார். ஊரில் இருக்க முடியாது எனவும் வேலையை விட்டு தூக்கிடுவேன் என கோபிநாத்தின் மிரட்டலால் பயந்து போன கிராம உதவியாளர் முத்துச்சாமி அலுவலகத்தில் கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.இதனை வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.
தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை அரசு அலுவலகத்திலேயே காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகளில் காலில் விழும் கிராம உதவியாளர் முத்துசாமியை, "மன்னித்துவிட்டேன் முத்து, உணர்ச்சிவசப்படாதே எனவும் கோபிநாத் தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. ஏற்கனவே அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் நிலையில் தாழ்த்தப்பட்ட படுத்தப்பட்ட அரசு ஊழியர் அதே பகுதியைச் சேர்ந்த உயர்சாதியினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பாக வி.ஏ.ஒ கலைசெல்வியிடம் கேட்டபோது, இது சாதி ரீதியான பிரச்சனை இல்லை எனவும் கோபிநாத் என்பவர் நேற்றுதான் முதன் முதலாக வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு வந்ததாகவும், அலுவலக நடைமுறைகள் தெரியாமல் கோபிநாத் சப்தம் போட்டபோது அப்படி செய்யக்கூடாது என உதவியாளர் முத்துச்சாமி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதற்கு கோபிநாத் , மீண்டும் சப்தமாக முத்துச்சாமியையும் சப்தம் போடவே பயந்து அவரது காலில் விழுந்து விழுந்ததாகவும் , உதவியாளர் முத்துச்சாமி இது தொடர்பாக புகார் கொடுக்க போகின்றாரா என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.