• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விஜயதசமி : கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வு

விஜயதசமி : கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வு

வித்யாரம்பம்

வித்யாரம்பம்

பச்சரிசியில் ஓம் கணபதி என எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பணியைத் துவங்கினர்.

  • Share this:
விஜயதசமி தினமான இன்று கோவை மாவட்டம் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கல்விப்பணியினை தொடங்கினர்.

விஜயதசமி தினமான இன்று கல்வி பணியை துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை. இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று வித்யாரம்பம் நிகழ்வானது நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர். பச்சரிசியில் ஓம் கணபதி என எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பணியைத் துவங்கினர். கொரொனா தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அய்யப்பன் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

குறிப்பாக கோயிலுக்கு வரும் நபர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொடுத்து கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர். கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பது ஒலிபெருக்கி மூலம் தொடர்த்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வித்யாரம்பம் நிகழ்விற்கு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய தினத்தில் கல்வி பணியை துவங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால் வித்யாரம்பம் நிகழ்வில் பச்சரிசியில் குழந்தைகளின் கைகளை பிடித்து வேதவிற்பன்னர்கள் எழுத வைத்தனர்.

கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர். வழக்கமாக வித்யாரம்பம் நிகழ்வில் குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் எழுதுவது வழக்கமாக இருந்தது.

Must Read : தசரா : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

கொரொனா தொற்று காரணமாக நாக்கில் தங்க ஊசியால் எழுத்தும் பழக்கம் கடந்த இரு வருடங்களாக கைவிடப்பட்டு இருப்பது  குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: