• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டாஸ்மாக் கடைகளின் அருகில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்

டாஸ்மாக் கடைகளின் அருகில் தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் தனியார்  மருத்துவமனை இணைந்து பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் புலியகுளம் பகுதியில் இன்று நடத்தப்பட்டது. இம்முகாமினை பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் புலியகுளம் மற்றும் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர். மருத்துவ ஆலோசனைக்கு பின் அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பவர்களுக்கு பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமினை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த வானதி சீனிவாசன், ’பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

பெண்கள் பொதுவாக தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் தயக்கம் காட்டக் கூடியவர்கள் என கூறிய அவர், இந்த நிலையில் அவர்களது குடியிருப்புகளுக்கு அருகில் இலவச மருத்துவ முகாம் நடத்தி ஆலோசனைகள் வழங்கி வருகிறோம் எனவும் இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் முதன்மையாக இந்தியா இடம் பெற்றுள்ளது என கூறிய அவர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பெண்களை விட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: