முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வால்பாறை வனச்சரகர் கைது பின்னணியில் நீதிபதி மகன்? - கொந்தளிப்பில் வனத்துறையினர்

வால்பாறை வனச்சரகர் கைது பின்னணியில் நீதிபதி மகன்? - கொந்தளிப்பில் வனத்துறையினர்

valparai ranger

valparai ranger

உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் மற்றும் நண்பர்கள் அத்துமீறி வனப்பகுதியில் சுற்றியதை கண்டித்த வனச்சரகர் மீது பொய் வழக்கு

  • 1-MIN READ
  • Last Updated :

வால்பாறை வனசரகர் கைதை கண்டித்து பொள்ளாச்சியில் வன ஊழியர்கள் பணியை புறக்கணித்து கண்டன கூட்டம் நடத்தினர். வனச்சரகரை விடுவிக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சிருகுன்றா வனப்பகுதியில் தங்கியிருந்த  சுற்றுலா பயணிகளை வால்பாறை வரசரகர் ஜெயசந்திரன் தவறாக பேசியதாக கூறி அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை, உலாந்தி, பொள்ளாச்சி, மானம்பள்ளி, அமராவதி, உடுமலை., ஆகிய வனசரகங்களில் பணியாற்றும் சுமார் 600க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகளும் வன ஊழியர்கள் இன்று பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அவர்  பேசும் போது வனசரகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற்று உடனடியாக அவரை விடுதலை செய்து மீண்டும் அவரை அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் தங்கியிருந்த நபர்கள் ஏன் இவர் மீது புகார் அளிக்கவில்லை சம்பவ இடத்திற்கு வராத ஒரு நபர் வனச்சரகர் மீது  பொய் புகார் கொடுத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், வனசரகர் மீது பொய் புகார் கொடுத்த வால்பாறை குற்றவியல் நீதிமன்ற ஊழியரை பணி நீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also Read: ஆட்டோ ஓட்டுநரை பழிவாங்க 22 கிமீ பயணம் செய்து வந்த குரங்கு – ஒரு திகில் அனுபவம்!

மேலும் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு முறையில்லாமல் யாரும் தங்க அனுமதிக்க கூடாது.

போராட்டத்தில் ஈடுபட்ட வனத்துறையினர்

வனத்துறை ஊழியர்கள் யாரையும் விடுதி பணிக்காக நியமிக்க கூடாது அந்த பணிகளுக்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் மேலும் கைது செய்யப்பட்ட வால்பாறை வனசரகரை விடுவிக்கும் வரை அனைத்து வனத்துறை ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Also Read:  500 கோடீஸ்வரர்களை உருவாக்கிய Freshworks நிறுவனம் – ரஜினிக்கு நன்றி சொல்லும் சாதனை தமிழர் கிரிஷ் மாத்ருபூதம்!

உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் மற்றும் நண்பர்கள் அத்துமீறி வனப்பகுதியில் சுற்றியதை கண்டித்த வனசரகர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில், அடைத்துள்ள சம்பவம் மனித உரிமை மீறல் செயலாகும் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஒட்டு மொத்த வன ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வனப்பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

சக்திவேல், செய்தியாளர் - பொள்ளாச்சி

First published:

Tags: Forest Department, News On Instagram, Pollachi, Valparai Constituency