ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Coronavirus Vaccine shortage | கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு போடும் பணிகள் நிறுத்தம்

Coronavirus Vaccine shortage | கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு போடும் பணிகள் நிறுத்தம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்த மக்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருந்த மக்கள்

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஊசி செலுத்தி கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை மாவட்டத்தில் 120 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

நேற்று தடுப்பூசி போட வந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி முன்பு தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த நிலையில், தடுப்பூசி முடிவடைந்தால் பொதுமக்களை போலிசார் கலைந்து செல்ல செய்தனர். இதனால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் படிக்க...  குழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்: மருத்துவர் கமல்

இந்நிலையில் இன்று கோவை அரசு கலைக் கல்லூரியில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி முன்பு கரும்பலகையில் 'இன்று தடுப்பூசி இல்லை' என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,"தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி மீண்டும் வந்தால் பணிகள் துவக்கப்படும்" என்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Corona Vaccine